Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/மனநிறைவுடன் வாழ்வோமே!

மனநிறைவுடன் வாழ்வோமே!

மனநிறைவுடன் வாழ்வோமே!

மனநிறைவுடன் வாழ்வோமே!

ADDED : ஆக 08, 2013 03:08 PM


Google News
Latest Tamil News
* நன்கு வேயப்பட்ட கூரைவீட்டில் மழைநீர் இறங்காது. அதுபோல நன்னெறியை பின்பற்றும் மனதில் தீய ஆசைகள் புகுவதில்லை.

* பொறாமை, பேராசை, தீய ஒழுக்கம் இவற்றைக் கொண்டவன் பேச்சாலும், உடல் அழகாலும் மட்டும் நல்லவனாக முடியாது.

* நாம் செய்த நன்மையும், தீமையும் நிழல் போல நம்மைத் தொடர்ந்து வருகின்றன.

* நல்லோரின் புகழ், காற்றில் நறுமணம் பரவுவது போல, நாலாபுறத்திலும் பரவி நிற்கும்.

* உதடுகளை அரண்மனைக் கதவு போல பாதுகாத்துக் கொள்ளுங்கள். வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் நன்மை தருவதாக மட்டுமே அமைய வேண்டும்.

* நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர். நோயற்ற வாழ்வே ஒருவன் அடைய வேண்டிய பாக்கியம். மனநிறைவே மிகப் பெரிய செல்வம்.

- புத்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us